You are here

ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி

கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம்.

ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும்  இப்போட்டி நடத்தபடுகிறது.

இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்

போட்டியின் விதிமுறைகள்:
1.  போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
2.  கதை தமிழில் இருக்கவேண்டும். கதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
3.  கதைக்களன்  குடும்பம், அனுபவம், மர்மம், நகைச்சுவை, அமானுஷ்யம், சுற்றுச்சூழல் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
4.  கதையின் அளவு  500  வார்த்தைகளுக்குக்  குறையாமலும்  1500   வார்த்தைகளுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.
5.  ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
6.  போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
7.  வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும்  போட்டி  நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
8.  ஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும்  கதைகளின்  எண்ணிக்கையைப்   பொறுத்து  10 முதல் 20  கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ்வுக் குழுவினரால்  தெரிவு  செய்யப்படும். அவை தமிழகத் தேர்வுக்குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.
9.  போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.

கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் மார்கழி மாதம் 16 தேதி (31.12.2014).  

இப்போட்டியின் முடிவுகள் தைமாதம் முதல் தேதி, பொங்கல் (15.01.2015) அன்று அறிவிக்கப்படும்.

ற்போது கதை அனுப்புவதற்கான கடைசித் தேதி 28 பிப்ரவரி 2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகள் 2015 மார்ச் மாதம் அறிவிக்கப்படும்.

பரிசுகள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் இலக்கிய விழாவின் போதுகொடுக்கப்படும். மேலும் போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள்  தொகுக்கப்பட்டு  சிறுகதைத் தொகுதியாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே எழுத்தார்வமுள்ள அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைகளை PDF கோப்பு வடிவில்  தாய்த்தமிழ்  பள்ளியின்  மின்னஞ்சல் முகவரியான  thaaitamilschool@gmail.com  க்கு அனுப்பவும். கதைகளை  அச்சுப்பிரதியாக (Hard copy) அனுப்ப  விரும்புவோர் பள்ளியின்  தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.  

நடுவர்கள்

திரு. பெருமாள் முருகன் -  http://www.perumalmurugan.com/
சிறந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இதுவரை ஏழு நாவல்கள் மற்றும் நான்கு சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் என இவரது தமிழிலக்கிய பங்களிப்பு நீளும். அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில்நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குறிப்பு: அன்மையில்  எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுத்துலகிலிருந்து விலகுவதாக பொதுவில் அறிவித்ததை அடுத்து அவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை இப்போட்டியின் நடுவர் பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம் என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.


திரு. பாலுமணிமாறன் - www.thangameen.com
சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தங்கமீன் பதிப்பக உரிமையாளர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் தொகுப்பு என பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தங்கமீன் இணைய இதழின் கர்த்தா இவர். இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு விதமான இலக்கியப் போட்டிகளையும் தங்கமீன் இணைய இதழின் மூலம் நடத்திவருகிறார்.

போட்டியின் ஊடக  அனுசரனையாளராக செயல்பட ஆஸ்திரேலியாவின் SBS வானொலியினரும் தமிழ் ஆஸ்திரேலியன் பத்திரிக்கையும்  சம்மதித்துள்ளனர். வெற்றிபெற்ற கதைகள் SBS வானொலியில் ஒலிபரப்படும் வாய்ப்புமுள்ளது.

மேலும் விபரங்களுக்கு
பார்த்தீபன் (partheeban.e@gmail.com) - 0432276977
முகுந்தராஜ் (mugunth@gmail.com) - 0423730122
சத்தியா (satya.ryan@gmail.com) - 0412452490

தாய்த்தமிழ்ப் பள்ளியின் முகவரி.
Thaai Tamil School Inc
PO Box 6212
Fairfield Gardens, QLD 4103